விபத்­துக்­குள்­ளான மலேசிய விமானத்தில் இலங்கையர்கள் இல்லை :புத்தி ஆதாவுத

உக்­ரை­னுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடைப்­பட்ட எல்­லைப்­ப­கு­தியில் விபத்­துக்­குள்­ளான மலேசிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் பயணிக்கவில்லை என நெதாலாந்திற்கான இலங்கைத் தூதுவர் புத்தி ஆதாவுத தெரி வித்துள்ளார். நெதர்­லாந்தின் அம்ஸ்­டர்டாம் நகரில் இருந்து கோலா­லம்பூர் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்-17 என்ற விமா­னம் உக்­ரை­னுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடைப்­பட்ட எல்­லைப்­ப­கு­தியில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த விமானத்தில் இலங்கைக் கடவுச்சீட்டுடைய எவரும் பயணிக்கவில்லை என நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் புத்தி ஆதாவுத தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply