பிரிட்டிஷ் பிரஜை கொலை வழக்கு தங்காலை முன்னாள் பிரதேச சபை தலைவர் உட்பட 4 பேருக்கு 20 வருட சிறை
பிரித்தானிய பிரஜையான குராம் சேக்கின் கொலை யுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தங்கல்லை பிரதேச சபை முன்னாள் தலைவர் சம்பத் சந்ரபுஷ்ப விதான பதிரன அடங்கலான நான்கு குற்றவாளிகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதேவேளை மேல் நீதிமன்ற தீர்ப்பை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வரவேற்றுள்ளது. கடந்த 2011 டிசம்பர் 25 ஆம் திகதி தங்காலையிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் வைத்து பிரித்தானிய நாட்டவரான குராம் சேக் என்பவர் கொலை செய்யப்பட்டதோடு அவரின் காதலியான விக்டோரியா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில் தங்கல்ல பிரதேச சபை தலைவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
சுமார் இரண்டரை வருடங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்ட வழக்கு தீர்ப்பு நேற்று அறிவிக் கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம வழக்கு தீர்ப்பை வழங்கினார்.
இதன்படி பிரித்தானிய பிரஜையை கொலைசெய்த குற்றத்திற்கு 20 வருட கடூழிய சிறையும் அவரின் காதலியை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்கு மேலும் 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இவ்விரு தண்டனைகளையும் ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
தங்காலை பிரதேச சபை முன்னாள் தலைவர் கம்லத் சந்திரபுஷ்ப, லகிரு கெலும், சமன் தேசப்பிரிய, டபிள்யூ. பிரகீத் ஆகியோருக்கு இவ்வாறு இருபது வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை ஏனைய இரு சந்தேக நபர்களும் குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட் டனர்.
இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் அபராதம் வழங்குமாறும் 4 குற்றவாளிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply