இலங்கையில் மூன்று நிமிடத்தில் ஒரு விபத்து நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி
இலங்கையில் மூன்று நிமிடத்துக் கொரு வீதி விபத்தும் நான்கு நிமிடத்திற்கு ஒருவர் வீதி விபத்துக்களில் மரணிப்பதாகவும் கண்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். கண்டியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களிலும் வீதி விபத்துக்கள் ஏற்படும் அதேவேளை, இதில் 80 சதவீதத்திற்கு மேல் 65 வயதைத் தாண்டியவர்களே பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதிலும் தனியாக வீதியில் செல்லும் 65 வயது தாண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு ள்ளனர். எனவே வீதி விபத்துக்கள் குறித்து 65 வயதிலும் அதிகமானவர்களை அறிவுறுத்த வேண்டியுள்ளது. இதற்கு சமய நிறுவனங்களுக்குச் சென்று அறிவுறுத்தல்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கி குறிப்பிட்ட வீதிகளில் செல்லும் சகல வாகனங்களினதும் செயற்திறன் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் தகுதியற்ற வாகனங்களை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும். இதன் மூலமும் பெருமளவு வீதி விபத்துகளை குறைக்க முடியும்.
மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை சுமார் 800 கிலோமீட்டர் வீதியைக் கொண்டுள்ள போதும் அவற்றில் 100 கிலோ மீட்டர்களே காபட் போடப் பட்டுள்ளன. ஆனால் அவற்றில் அதிக மானவற்றில் வீதிப் பாதுகாப்பு அறி வித்தல்களும் குறியீடுகளும் காணப்படு வதில்லை. இதன் மூலமும் விபத்துகள் ஏற்படுகின்றன.
கண்டி நகரின் பிரதான வாயில்களான கெட்டம்பே, மஹய்யாவ, தென்னகும்புற ஆகிய இடங்களில் வாகன புகைப் பரிசோதனை அலகுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply