புல்மோட்டை வைத்தியசாலையிலிருக்கும் விசேட மருத்துவக் குழுவுக்கு உதவியாக திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநிற்கும் இந்திய கப்பல்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தப்பி வரும் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்வதற்காக இந்திய இராணுவத்தினரை உள்ளடக்கிய மருத்துவர்கள் குழு எதிர்வரும் 9ம் திகதி இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ குழுவுக்கு உதவியாக இந்திய கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தில் சில காலம் தரித்து நிற்குமென தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வசதிகளை வழங்க இந்திய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் வெளிவந்தன. இத்திட்டப்படி, புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்க வசதிகளுடன் உரிய கட்டடம் தருவது இலங்கையின் பொறுப்பாகும். இந்த கள வைத்தியசாலையில் இந்திய மருத்துவர்கள், தாதிகள் பணிபுரிவர். அத்துடன் 5 இந்திய விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவும் பணியில் ஈடுபடும். மருந்துகளை இந்தியா வழங்கும்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை வரும் இந்த மருத்துவக் குழு புல்மோட்டை வைத்தியசாலையில் தமது பணிகளை முன்னெடுப்பர் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (மார். 6) தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 7 கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களை கொண்டு வந்து அதனை சுகாதார அமைச்சிடம் இந்தக் குழு கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply