153 அகதிகள் குறித்த தகவல்களை அவுஸ்ரேலியா வெளியிட மறுப்பு!
அவஸ்ரேலியா சென்ற 153 அகதிகள் குறித்த தகவல்களை தொடர்ந்தும் இரகசியாமக வைத்திருக்க அவுஸ்ரேலியா அரசு தீர்மானித்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.அவுஸ்ரேலியா நோக்கி சென்ற 153 அகதிகள் இன்றுவரை எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரை அவுஸ்ரேலியா அரசாங்கம் வெளியிடவில்லை.இவர்கள் அவுஸ்ரேலியாவின் கப்பல் ஒன்றில் மூடிய அறைக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அகதிகள் வெளியில் தொடர்பு கொள்ளமுடியாதவாறு முடக்கப்பட்டுள்ளார்கள் அகதிகள் சார்பான சட்டதரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply