பிரான்ஸ் நாட்டில் தனியாக காருக்குள் விடப்பட்ட குழந்தை வெயில் தாக்கி பலி
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியின் அவிக்னான் அருகில் உள்ள கோர்ட்ஹெசான் பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று அப்பகுதியில் உள்ள பகல் நேர குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தனது ஒரு வயது குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.காப்பகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் ஏதோ பேச விரும்பிய அந்த தாய், குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு காப்பகத்துக்குள் சென்றார். பேசி முடித்து காருக்கு திரும்பிய அந்த 31 வயது பெண், உள்ளே வைத்து விட்டு சென்ற குழந்தை உடல் முழுக்க வியர்த்து, மூச்சற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு பதறிப் போனார்.உடனடியாக ஆஸ்பத்திரிக்கு காரை ஓட்டிச் சென்ற அவர், முதலுதவி அளித்து குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால், செயற்கை சுவாசம் மூலம் குழந்தையை உயிர்ப்பிக்க டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பிரான்சில் தற்போது, 34 டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பநிலை நிலவி வருவதால், காருக்குள் வியர்த்து, உடலின் நீர் சத்தை இழந்து, அந்த குழந்தை பலியாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கவனக் குறைவால் மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அந்த தாய் மீது போலீசார் வழக்கு தொடுத்து விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply