மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த தெரிவு செய்யப்படுவார் : வீ.இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காலனித்துவ ஆட்சியின் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளது. சவால்களை வென்றெடுத்து நாட்டை முன்னோக்கி நகர்த்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமானது. மூன்று தசாப்த கால போரினை முடிவுக்குக் கொண்டுவந்து இந்த ஜனாதிபதி முறைமை பொருத்தமானது என்பதனை நிரூபித்துள்ளார்.

காலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்ட அபிவிருத்தி குறித்து மக்கள் பேசினார்கள். தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே மக்கள் பேசுகின்றனர்.

ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது தமிழ் கட்சிகள் அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளிக்கும். அரசாங்கம் தொடர்பில் சில நேரங்களில் விமர்சனங்கள் எழுந்தாலும் ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்கு அளவுகடந்த மரியாதை காணப்படுகின்றது என இராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply