லிபியாவில் நிர்க்கதிக்குள்ளான 14 இலங்கையர் நாடு திரும்பினர்
லிபியாவில் நிர்க்கதியாகியிருந்த 14 இலங்கையர் நேற்று பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் விசேட விமானம் மூலம் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவி த்துள்ளது. லிபியாவில் ஏற்பட்டிரு க்கும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்புர ரையின் பேரில் லிபியாவில் நிர்க்கதியா கியிருந்த 14 இலங்கையர்களும் கெய்ரோ நகரிலுள்ள இலங்கைத் தூதுவரால் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டிருந்தனர்.
இவர்கள் விசேட விமானம் மூலம் நேற்றுமுன்தினம் 19ஆம் திகதி டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் அனுப்பிவைக் கப்பட்டிருந்தனர்.
லிபியாவில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக வேலைவாய்ப்புக்களுக்காக லிபியா செல்பவர்களுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply