தேர்தலை எதிர்கொள்ளும் பலம் ஐ.தே.கவுக்கு இல்லை அறிக்கை விட்டு காலம் கடத்துகிறது
பானை விளக்கு என்ற ‘கலகெடி செல்லம்’ விளை யாட்டை கொண்டு வந்த ஐ.தே.க.விற்கு தேர்தல்களை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 1994ம் ஆண்டில் இருந்து நாம் 20 வருடங்களாக சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இதன் காரணமாக தேர்தல் என்றாலே எதிர்க்கட்சிக்கு நடுக்கம் பிடித்து விடும்.
1977ல் இருந்து 1994 வரை ஐ.தே.க. 17 வருடம் ஆட்சி புரிந்துள்ளது. அதேபோல் 1994 முதல் இன்று வரையான 20 வருடத்தில் இரண்டு வருடம் தவிர 18 வருடங்கள் நாம் ஆட்சி புரிந்து வருகிறோம். அவர்களது 17 வருட ஆட்சிக்கும் எமது ஆட்சிக்கு மிடையே பாரிய வித்தியாசம் உண்டு.
98 சதவீதமான உள்ளூராட்சி அதிகாரங்கள் எமது கைகளில் உள்ன. ஆனால் ஐ.தே.க.வின் 17 வருட ஆட்சியின் போது பல உள்ளூராட்சி அமைப்புக்கள் மாகாண சபைகளை எமது கட்சி கைப்பற்றியிருந்தது. காரணம் எம்மிடம் திட்டங்கள் உண்டு. ஆனால் ஐ.தே.க. யினரிடம் எது வித திட்டமும் இல்லை.
1978 ல் தேர்தல் தேவையில்லை என்று வாக்களிக்கக் கோரியவர்கள்தான் ஐ.தே.க. யினர். ஆனால் தேர்தலுக்கான காலம் வரும் முன்பே நாம் தேர்தல்களை நடாத்துகின்றோம்.
ஐ.கே.க. இன்று கொழும்பில் இருந்து கொண்டு ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அறிக்கையை மட்டும் விடும் ஒரு கட்சியாகி விட்டது. இன்று இலங்கையில் உள்ள 23 தொலைக்காட்சி நிறுவனங்களும், 49 எப்.எம். ரேடியோ நிறுவனங்களும் 189 பத்திரிகை நிறுவனங்களும், 220 இணையத் தளங்களும் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன மக்கள் உண்மை நிலை புரிந்து கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply