காசாவில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் இரு தரப்பிலும் ஞாயிறன்று அதிக சேதம்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் 87 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரே பகுதியை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ் கூறுகையில், காசாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெஜய்யாவில் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். தங்களது தாக்குதல் மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தாங்கள் உயிருடன் பிடித்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். அவர்களது அறிவிப்பை வாழ்த்தும் விதமாக காசா முழுவதும் துப்பாக்கி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆனால் தங்களது வீரர் ஒருவர் பிடிபட்டதை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply