சண்டை நிறுத்தத்திற்கு ஏற்பாடு புடினிடம் அதிபர், ஏஞ்சலா மெர்கல்கோரிக்கை
ஜெர்மனி பெண் அதிபர், ஏஞ்சலா மெர்கல், நேற்று, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினை தொடர்பு கொண்டு, உக்ரைன் பிரிவினைவாதிகளுடன் பேசி, சண்டை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என, கேட்டுக் கொண்டார். முந்தைய, சோவியத் ரஷ்யா அமைப்பிலிருந்து வெளியேறிய உக்ரைன் நாடு மீது, ரஷ்யாவுக்கு கோபம் உள்ளது. உக்ரைனில் ஒரு மாகாணமான கிரிமியாவை, ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டது.அந்நாட்டின் கிழக்கு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என, உக்ரைன் பிரிவினைவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் ரஷ்யா வழங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 17 ல், மலேசிய பயணிகள் விமானத்தை, உக்ரைன் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்; அதிலிருந்த, 298 பேர் இறந்தனர். இதற்கு, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என, அமெரிக்கா தெரிவித்து வருகிறது.இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க, ஜெர்மனி நாடு சமரச முயற்சியில் ஈடுபட்டு, மலேசிய விமான விபத்து குறித்து, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான, ஐ.சி.ஏ.ஓ., விசாரணைக்கு, ரஷ்யாவை சம்மதிக்க வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடினை நேற்று போனில் தொடர்புகொண்ட ஜெர்மனி அதிபர், ஏஞ்சலா மெர்கல், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்நாட்டு சண்டையில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாதிகளுடன் பேசி, போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; இதற்காக தன்அதிகாரத்தை ரஷ்யா பயன்படுத்த வேண்டும், என, கேட்டுக் கொண்டார்.அதிபர், புடின் அதற்கு என்ன பதில் கூறினார் என தெரிவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply