உள்ளக தீர்வுகாண சகலரும் ஒத்துழைக்க வேண்டும் : தன்சானியா வெளிவிவகார அமைச்சர்
மோதல்களுக்குப் பின்னர் குறுகிய ஐந்து வருட காலத்திற்குள் அரசாங்கம் கண்டுள்ள வெற்றிச் சாதனைகளை பிற நாட்டிலிருந்து இலங்கை வரும் பார்வையற்றவர்களால் கூட உணரக்கூடியதாக விருக்குமென தன்சானிய வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பேர்னார்ட் கெமிலியஸ் மெம்பே நேற்று தெரிவித்தார். இலங்கை அரசிடம் கேட்டறியக்கூடிய பல நல்ல அனுபவங்கள் உள்ளன. பலர் இதனை முடக்கும் வகையிலான தீய கட்டுக் கதைகளையும் போலி பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும், அரசாங்கம் சிறிதும் சளைக்காது சமாதானம். நல்லிணக்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியென நீண்ட பாதையில் தொடர்ந்தும் முன்னேறி வருவதன் மூலம் அனைத்து சவால்களையும் முறியடித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமெனவும் அவர் கூறினார்.
இன்னும் குறுகிய காலத்திற்குள் இலங்கையே ஒரு மாளிகையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஐந்து வருடங்களுக்குள் குறிப்பிட்டுக் கூறும்படியாக இத்தனை மாற்றங்களுக்கும் காரணமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களேயாவார். பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ள இந்த நாட்டில் உண்மையானதும் விசுவாசமானதுமான உள்ளக தீர்வினைக் காண அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தன்சானிய வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தன்சானியாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே தன்சானிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியமைக்காக நான் இலங்கை அரசாங்கத்துக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இப்போதும் என் கண் முன் வந்து செல்கின்றன. பொதுநலவாயத்தினை தொடர்ந்து மீண்டும் இலங்கை வந்துள்ள எனக்கு ஒன்பது மாத காலப் பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் தெங்கு பயிர்ச் செய்கைக்கென இலங்கையில் தனியானதொரு அமைச்சு இயங்குவது பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கம் கொண்டுள்ள நாட்டத்தை காட்டுகின்றது.
இந்த நாடு தொடர்ந்தும் அபிவிருத்தியை நோக்கி பயணித்துக்கொண்டேயிருக்கிறது. இலங்கையைப் பற்றி கேட்டு அறிவதனைப் பார்க்கிலும் இங்கு நேரில் வந்து அதனை கண்டுணர வேண்டும். பார்வையற்றவர்களால் கூட இதனை உணர முடியும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்: தன்சானியா இலங்கையின் நேர்மையானதும் நெருக்கமானதுமான நட்பு நாடாகும் எனவும் இரு நாடுகளுக் குமிடையிலான நல்லுறவு தொடருமெனவும் குறிப்பிட்டார். மேலும் இரு தரப்பு சந்திப்பின் போது இலங்கைக்கும் தன்சானியாவுக் குமிடையிலான வர்த்தகம். மின்சக்தி வலு, தொழில்நுட்பம், உயர் கல்வி, கலாசாரம், கலை, பாதுகாப்பு, விவசாயம், பொறியியல் கட்டுமானம் ஆகிய துறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார்.
நேற்று வெளிவிவகார அமைச்சில் வைத்து தெங்கு அபிவிருத்தியமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் தன்சானிய வெளிவிவகார அமைச்சர் மெம்பேயும் நிலையான தெங்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரசியல் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக் குழுவினை ஸ்தாபிப்பது தொடர்பிலான இரண்டு வெவ்வேறு இருதரப்பு உடன்படிக்கைகளிலும் அமைச்சர்களான மெம்பேயும் பீரிஸ¤ம் கைச்சாத்திட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply