தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வடமாகாண சபையில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரச்சி னைகளை தீர்க்க விரும்பாமல் இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ் சாட்டி யுள்ளார். தற்போது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாகாண சபை, வடக்கே ஆட்சியில் இருப்பதால் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவின் பணிகள் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
இரணை மடு நீர் தொடர்பான பிரச்சினை இதற்கு ஒரு உதாரணம். மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில், மத்திய அரசின் தரப்பிலிருந்து தடை ஏதும் இருக்குமாயின் அதை விலக் கித்தர தான் சித்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் தனது செவ்வியில் தெரி வித்துள்ளார்.
மாகாண வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சுயநல அரசியல் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பொதுமக்கள் மற்றும் ஆளுநர் முன் னிலையில் விவாதிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பு செயலணிக் குழு, போர்க் காலம் மற்றும் போருக்கு பின்ன ரான காலத்தில் வட மாகாணத்தில் பல பணிகளை முன்னெடுத்து வந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரி வித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply