இந்தியாவை அச்சுறுத்தும் எத்தரப்புக்கும் இடமளியோம் : ஜீ.எல்.பீரிஸ்
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையிலிருந்து செயற்படு வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். திருகோணமலையில் விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு சீனாவின் சீ.ஏ.ரி.ஐ.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும், இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பி யிருந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதி இடையே செய்துகொண்ட கடிதப்பரி மாற்றத்துக்கூடாக இரு நாடுகளினதும் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப் பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய விடயங்களில் தத்தமது நிலப்பகுதியில் இடமளிப்பதில்லையென இணங்கியிருக்கிறது. எனினும் இந்தி யாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் திருகோணமலை பகுதியில் எந்தவிதமான செயற்பாடுகளுக்கும் அனுமதிப்பதில்லை யென அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சிக்குவந்த
ஏனைய அரசுகளும் பின்பற்றியே வந்தன. எனினும் திருகோணமலையில் சீன நிறுவனத்துக்கு வழங்குவதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டையோ இறைமையையோ பாதுகாப்பதற்கு எமக்கிடையில் ஒப்பந்தம் அவசியமில்லை. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவே போதுமானது. இந்தியாவிற்கு அச்சுறுத்தும் எந்தவொரு தரப்பிற்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.
விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. எனினும் அதனை திருகோணமலையில்தான் அமைப்பது என்று பற்றி எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையமொன்றை அமைப்பதானது இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுடன், விமான உற்பத்தித்துறை தொடர்பாக பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவாக அமையும். அத்துடன் பெருந்தொகைப் பணத்தை மீதப்படுத்தவும் முடியும். இதனாலேயே இவ்வாறான நிலையமொன்றுக்கு அனுமதிவழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார். ஜெட் விமானங்களைத் தரையிறக்குவதற்கு ஏதுவாக இலங்கையில் சில இடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமானநிலையப் பகுதி, மத்தள மற்றும் திருகோணமலை ஆகிய இடங்கள் காணப்படுகின்றன. எனினும் சீன நிறுவனத்திற்கு எந்த இடம் வழங்கப்படவேண்டும் என்பது பற்றி அரசாங்கம் இன்னமும் தீர்மானிக் கவில்லை.
அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசியபோதும் அவர் இதுபற்றி வினவினார்.
இதேவேளை, இதே சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நானும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சந்தித்து உரையாடியிருந்தோம். அப்போது அவர் எங்களிடம் கூறியதொரு விடயம் இன்னமும் நினைவில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இந்த நாட்டுக்குள் நாம் அரசாங்கத்தை விமர்சிப்போம். ஆனால் வெளிநாட்டுக் கொள்கையில் நாடு என்ற ரீதியில் நாம் ஒரே நிலைப் பாட்டிலேயே இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது எனக் கூறியிருந்தார். ஆனால் எமது நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் அப்படி இல்லாமல் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply