இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்: நேபாளத்தில் திறக்கப்பட்டது
நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமுள்ள இந்த கர்கோட் பாலம் 1.8 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆசிய வளர்ச்சி வங்கியால் நிதி ஒதுக்கப்பட்டு சங்கோசி நதியின் மீது கட்டப்பட்ட இந்த பாலத்தில் சென்றால் குறுகிய நேரத்தில் சீனாவை அடையமுடியும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தை வளச்ச்சியடைய செய்வதற்கும், ஏழ்மையை குறைக்கும் நோக்கிலும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் கட்டப்பட்டதன் மூலம் அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி, வர்த்தகம், அதிக மதிப்பீடு கொண்ட விவசாயம் ஆகியவை பெருத்த வளர்ச்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியான பிமலேந்திர நிதி இந்த புதிய பாலத்தை திறந்துவைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply