சென்னை மருத்துவர்களின் திறமை: வலிப்பு நோயிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ள சிறுமி

வங்காளதேசத்தைச் சேர்ந்த சமியா சுல்தானா என்ற எட்டு வயது சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை எல்லோரையும்போல் இயல்பான வாழ்க்கையே வாழ்ந்துகொண்டிருந்தாள். அதன் பின்னரே திடீரென்று தனது வலது கையும், வலது காலும் தனது கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக இயங்குவதை அவள் உணர்ந்தாள் வங்காளதேச மருத்துவர்கள் இது ஒரு விதமான கீல்வாத தசை வலிப்பு நோய் என்பதைக் கண்டறிந்தனர்.விரைவிலேயே வலிப்பு நோயால் தாக்கப்பட்ட அந்த சிறுமி நடமாடவும், உணவு உண்ணவும் முடியாத நிலைமைக்கு ஆளானாள். அவளது இடது மூளையில் இருந்த வீக்கமானது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக்கூடும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கருதினர்.  கடந்த பிப்ரவரி மாதம் சமியா சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஏப்ரல் மாதத்தில் நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்ட அந்த சிறுமி வென்டிலேடர் மூலமாகவே செயற்கை சுவாசம் பெற்று வந்தாள்.

ஏப்ரல் மத்தியில் அவளது நிலைமை மேலும் மோசமடைந்தபோது மலர் மருத்துவமனையில் சமியா சேர்க்கப்பட்டாள்.  மருந்துகள் மூலம் அவளுக்கு குணமளிக்க முடியாதபோது மருத்துவர்கள் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆறு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட அவரது இடது மூளை மற்ற பகுதியிலிருந்து மருத்துவர்களால் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று வாரங்கள் வைக்கப்பட்டிருந்த சமியா சுல்தானா இப்போது உடல் குணமடைந்து நடக்கவும், உணவு உட்கொள்ளவும் முடிகின்றது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருந்துகள் மூலம் சரி செய்யப்படமுடியாத நிலையிலும் அல்லது வேறு எந்த அறுவை சிகிச்சையினாலும் குணப்படுத்த முடியாத நிலையிலும் இத்தகைய முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாயக் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply