அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் புரட்சியை ஏற்படுத்துவது சுலபமானதல்ல : ஜோன் செனவிரட்ன

அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் புரட்சியை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதனைப் போன்று இலங்கையில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் எதிர்க்கட்சி என்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதனை விடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் தாளத்திற்கு ஏற்ற வகையில் எதிர்க்கட்சிகள் நடனமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாது எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியை வழிநடத்த முடியாதவர்கள் எவ்வாறு மக்களை வழி நடத்துவார்கள் என ஜோன் செனவிரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply