ஊடகங்கள், அரசியல்வாதிகளின் அர்ப்பணிப்பிலேயே சமூக நல்லிணக்கம் : அமைச்சர் பஷில் ராஜபக்ஷ

பிரிவினையை ஏற்படுத்தும் வெளிச் சக்திகளின் தேவைகளுக்கேற்ப செயற்படாமல் சமூக நல்லிணக்க த்துக்கான முயற்சி, அர்ப்பணிப்புகளில் அரசியல் வாதிகளும், ஊடகங்களும் செயற்பட வேண்டுமென அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற சமூக நல்லிணக்கத்து க்கான ஊடக பயன்பாடு” என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி விக்கையில்: நல்லிணக்கம் அனைத்து மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். எனினும் சமூகங்களுக்கிடையிலான நல்லினக்கத்தை சீர்குலைக்க செயற்படுபவர்கள் விடயத்தில் ஊடகங்கள், அரசியல்வாதிகள் அவதானமாக செயற்படுவது முக்கியம்.

2005ற்குப் பின் இந்த சமூக நல்லிணக்கம் உண்மையில் முன்னேற்ற மடைந்து காணப் படுகிறது. 2009 வரை மோதல் சூழல் தொடர்ந்த போதும் அது சமூக பிரச்சினையாக எழவில்லை ஆயுதக்குழுக்களிடையேயான யுத்தமாகவே இருந்துள்ளது. இரு சமூகங்களிடையில் ஏற் பட்டதல்ல.

இந்த நாட்டின் வரலாற்றைப் பார்க்கும்போது ஒவ்வொரு யுகங்களில் இனங்களுக்கிடையில் உக்கிரமாக மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எமது நாட்டில் முதல் தடவையாக “மார்சல் லோ” ஊரடங்கு சட்டம் பேதிரிஸ் அவர்களின் கால பிரச்சினைகளில் தான் இனங்களுக்கிடையில் 57ல் ஏற்பட்ட மோதல் உட்பட இடைக்கிடை இது போன்ற மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதில்லை.

அண்மையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று பேருவளையில் ஏற்பட்டுள்ளது. அந்த வேளையில் ஊடகங்களுக்குப் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது. குறிப்பாக வதந்திகளைத் தடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை எடுத்தியம்புவதற்குமான பொறுப்பு ஊடகங் களிடமிருந்தது. உண்மையை அறிந்து கொள்வதில் இந்த சமூக நல்லிணக்கமும் சீர்குலையாமல் அவதானமாக செயற்படவேண்டியிருந்தது.

ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் இந்த நாட்டு மக்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்த சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் கூறவேண்டியுள்ளது.

வேறு காலங்களில் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருந்தால் என்ன வாகியிருக்கும் என்பதை சிந்தித்து அதுபோன்று நடக்காமல் நல்லிணக் கத்தை ஏற்படுத்த முடிந்தமை மகிழ்ச்சிக் குரியது.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.

அளுத்கமை பிரச்சினை சமூக பிரச்சினையாக வேறு பிரதேசங்களுக்கும் பரவுவது தடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பாராளு மன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேராசிரியர் தம்ம திசாநாயக்க, க லாநிதி மொஹான் சமரநாயக்க ஆகியோரின் விரிவுரைகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிட த்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply