குர்திஷ் அரசியல்வாதியான பெளட் மஸ்சூம் ஈராக் அதிபராகத் தேர்வு
குர்திஷ் அரசியல்வாதியான பௌட் மஸ்சூம்(77) பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஈராக்கின் புதிய அதிபராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் தற்போதைய அதிபரான ஜலால் தலபானியின் குர்திஸ்தான் கட்சியின் தேசபக்தி யூனியனை நிறுவியவர்களில் மஸ்சூமும் ஒருவராவார். அரபு நாடுகளின் சன்னி மற்றும் ஷியா பிரிவு அரசியல்வாதிகளுடன் நல்ல உறவுகளை நிர்வகித்துவரும் மென்மையான மிதவாதி என்று இவர் அறியப்படுகின்றார்.
பெரும்பாலும் அலங்காரத் தேர்வாகக் கருதப்படும் இந்த அதிபர் பதவிக்குத் தங்களுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க குர்திஷ் பிளாக்கிற்கு அதிக நேரம் தேவைப்பட்டதால் அதிபர் வாக்கெடுப்பு ஒரு நாள் தள்ளிப் போடப்பட்டது. மஸ்சூமை தங்கள் வேட்பாளராக அவர்கள் நேற்று இரவுதான் அறிவித்தனர்.
கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்தியபோது குர்து இனத்தவர் அதிபராக இருக்க ஷியா பிரிவைச் சேர்ந்தவர் பிரதமராகவும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர் பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply