தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் இன்று ஆயுதங்கள் ஒப்படைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடருந்த அனைத்து ஆயுதங்களையும் இன்று  அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான வைபவம் இன்று  பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  கட்சியின் செயலாளர் கைலேஸ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் சம்பத் பெர்ணாண்டோவிடம் முதலமைச்சர் பிள்ளையான் வைபவ ரீதியாக ஆயுதங்களை ஒப்படைத்தார்.

ஆர்.பி.ஜி துப்பாக்கிகள் -06, ஆர்.பி.ஜி லோன்சர் -40, ஆர்.பி.ஜி டங்கர் -40,  ஏகே-47 ரக துப்பாக்கி ரவைகள் -4650, பிகே ஷெல் -06, கேஎல்எம்ஜீ தோட்டாக்கள் -620, ரி56 -52, ஸ்எம்ஜி -01, ரி81 -01, ஏகே47 மெகஷின் -168, ஏகே எம்எல்ஜி பெல்ட் -06, ஏகேஎல்எம்ஜி ரம் -03, ஏகேஎல்எம்ஜி துப்பாக்கிகள் -02, பூச்சர்- 66, வெளிச்சக் குண்டுகள் -16, கிரனைட்-02 ஆகியனவே இன்று ஒப்படைக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply