சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உதவுகின்றனர் : எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டவிரோத நடவடிக்கைக் காரர்களுக்கு திரை மறைவில் உதவி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.மாத்தளை நகரில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று போதைப் பொருள் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. போதைப் பொருள் பற்றி நாம் ஏதும் கூறினால் அவர்களை கைது செய்து ஒப்படைக்கும் படி எமக்குக் கூறுகின்றனர். அதே நேரம் பொலிஸார் திடீர் வேட்டைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக ஊடகங்களுக்குக் காட்டுகின்றனர். மறுபுறம் அவை மீண்டும் சந்தைக்கு வந்து விடுகின்றன.
அதனை மறுவழியில் மீண்டும் ஏதோ ஒருவகையில் விற்பனைக்கு விடுகின்றனர். இவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் பொது மக்களுக்கிடையே திருப்பி ஒப்படைக்கப் படுவதால் என்ன பயன் உண்டு. கோடிக்கணக்கான பொருளுக்கு அதிபதியான பெரிய புள்ளிகள் தப்பிக்கொள்ள ஓரிரு மில்லிகிராம்களை வைத்துள்ள சிறிய மீன்களே வலையில் மாட்டிக் கொள்கினறன.
இப்படியான விடயங்களை எதிர்க்க முடியாதுள்ளது. ஏனெனில் இன்று சுதந்திரமான ஆணைக்குழுக்கள் இல்லை. இதனால் அரச மற்றும் பொலிஸ் துறைகளின் சுயாதீனத் தன்மை பறிபோய் விட்டது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுவதுடன் நிறைவேற்று அதிகார முறையும் விருப்பு வாக்கு முறையும் ஒழிக்கப்ட்டால் இந்த வீழ்ச்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும். அல்லாத பட்சத்தில் ஒரு குடும்ப அதிக்கம் மட்டுமே நிலை நாட்டப்பட்டு நாட்டுமக்களின் அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கப் பட்டு விடும் நிலை தற்போது ஏற்பட்டு விட்டது.இது தொடர்பாக நாட்டு மக்கள் தெளிவு பெறவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply