ஏட்டிக்குப் போட்டியாக குழுக்களை நியமிக்காது ஒத்துழைக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கூட்டமைப்பு :மாவை சேனாதிராஜா
ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்டிக்குப்போட்டியாகவே அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர் குழுவை நியமித்துள்ளது. யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் சர்வதேச விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்தாது ஒத்துழைப்புக் களை வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவில் நம்பிக்கையீனங்கள் காணப்படுகின்றபோதும் உரிய அழைப்பு விடுக்கப்பட் டால் அந்தக் குழுவினரை சந்திப்பது குறித்து பரிசீலிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
காணமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரடங்கிய சர்வதேச நிபுணர்குழுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமா? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளைமேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நிபுணர் குழுவை நியமித்துள்ளது. வௌிநாடுகளின் தலையீட்டை நாம் விரும்பவில்லை என்றும் போலிக்காரணத்தை கூறி அக்குழுவை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்க முடியாது என அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக இந்தவிவகாரம் மேலும் வலுவடைந்தால் தமக்கு நெருக்கடி நிலைமை உருவாகும் என்ற அச்சத்தின் காரணத்தால் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று நிபுணர்களைக் கொண்ட சர்வதேச குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நியமனமானது வெறுமனே ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக்கு ஏட்டிக்குப்போட்டியாக செய்யப்பட்டதொன்றாகும்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலஇ ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றபோதும் அந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதா? இல்லை நிராகரிப்பதா? என அரசாங்கமே இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறியிருக்கின்றார்.
அவ்வராறன நிலையில் அரசாங்கம் நியமித்துள்ள இந்த சர்வதேச நிபுணர்குழுவின் மீது நாம் எவ்வாறு முழமையான நம்பிக்கை வைக்க முடியும். எனினும் காணமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுஇ அதற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்குழு ஆகியவற்றின் மீது நம்பிக்கையீனம் காணப்படுகின்ற போதும் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அதுகுறித்து அத்தருணத்தில் உரிய வகையில் பரிசீலனை செய்வோம்.
தற்போது பலஸ்தீனில் இடம்பெறும் குற்றங்களுக்கு ஐ.நா. தலையிட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகின்றது. அவ்வாறானால் இங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஏன் ஐ.நா.மனித உரிமைப் பேரவையால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு இடமளிக்காதிருக்கின்றார்கள். யுத்தக்குற்றங்கள்இ மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையான அக்றையை அரசாங்கத்தரப்பு கொண்டிருப்பார்களேயானால் அவ்வாறான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அரசாங்கம் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதனை தவிர்த்து நெருக்கடிகளை குறைப்பதற்காக ஆணைக்குழுக்களையும்இ நிபுணர்குழுக்களையும் நியமிப்பதால் எவ்விதமான பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply