திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் அமைப்பது புத்திசாதூரியமான தீர்மானமல்ல : தயான் ஜயதிலக்க
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாத என சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் சீன நிறுவனமொன்று விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதிப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய விவகாரங்களில் எடுக்கப்படு;ம் தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனமொன்று இலங்கையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும், அதன் அமைவிடமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையிடமும்,இலங்கையி;ன் பாதுகாப்பு இந்தியாவிடமும் தங்கியிருப்பதாக அண்மையில் பாரதீய ஜனதா கட்சி சிரேஸ்ட கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான டொக்டார் சேசத்ரீ தாரீ வெளியிட்ட கருத்து கவனிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு தந்திரோபாயங்களில் இலங்கையின் அமைவிடம் முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதே இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply