பாகிஸ்தானில் பேஸ்புக் தகவலால் வன்முறை: பெண்-பேத்திகளை கொன்ற கும்பல்
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேஸ்புக்கில் தகவல்களை பதிவு செய்ததால் ஏற்பட்ட வன்முறையில் பெண் மற்றும் அவரது இரண்டு பேத்திகள் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்ஜன்வாலா நகரில் வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டது. அவர்களில் அகமதி இனத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டதாக குற்றம் சாட்டி மற்ற வாலிபர்கள் சண்டையிட்டனர்.பின்னர் சுமார் 150 பேர் அப்பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று, அந்த வாலிபர் மீது மத நிந்தனை வழக்குப்பதிவு செய்யும்படி வலியுறுத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, மற்றொரு கும்பல் திடீரென அகமதி இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்தது. இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு பேத்திகள் கொல்லப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply