ஹெரோயின் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை : அஜித் ரோஹண
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது குறித்து எவ்வித தகவல்களோ ஆதாரங்களோ இதுவரையில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் எந்தவொரு அரசியல்வாதியும் கைது செய்யப்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுத்தாது ஆதாரங்களை சமர்ப்பித்தால் அவ்வாறான நபர்களக்கு எதிராக சட்ட நடவடி;ககை எடுகு;க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறன்னினும் குற்றம் சுமத்தியவர்கள் தாமாக முன்வந்து காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா அல்லது ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்களை தொடர்பு கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை தொடர்புகொண்டு போதைப் பொருள் கடத்தல் குறித்து தகவல்களை வழங்குமாறு கோரினால் ஊடங்களுக்கு தாம் அளித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுவார்கள் என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கைது செய்யப்பட்ட எந்தவொரு சந்தேக நபரும் தமக்கு பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக வாக்கு மூலம் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசியல்வாதிகளை கைது செய்யவோ அல்லது விசாரணை செய்யவோ முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply