ஐ.நா பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுப்பேன் : மிச்சல் சிசன்

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுக்கப் போவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் அமெரிக்க பிரதி பிரதிநிதி பதவிக்காக, அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா சிசனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.இந்த பரிந்துரை காங்கிரஸ் சபை அங்கீகரித்தால், நாட்டின் நலனை முதனிலையாகக் கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளதாக சிசன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்காவின் நோக்கங்களையும் இலக்குகளையும் எட்டுவதற்கு முனைப்புடன் செயற்படப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். லெபனான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட சில நாடுகளில் சிசன் அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது அமெரிக்காவின் பணியல்ல எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான முறையில் செயற்படுவதன் மூலம் அமெரிக்காவின் வேலைப்பளுவை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply