சிறப்பாக செயல்படும் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி: மோடி முடிவு
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு நேர்மையான நிர்வாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மத்திய மந்திரிகளுக்கும், பா.ஜனதா எம்.பி.க்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் 150–க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.பாராளுமன்றம் மற்றும் டெல்லி மேல்–சபையில் 320 பேர் பா.ஜனதா எம்.பி.க்கள். இவர்களுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதால் பா.ஜனதா எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும் கட்சி மேலிடமும் விரும்புகிறது.
எனவே, பா.ஜனதா எம்.பி.க்களின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற கூட்டத்திற்கு எம்.பி.க்களின் வருகை, கேள்வி கேட்பது, விவாத திறமை ஆகியவை எப்படி இருந்தன என்பதற்கு ஏற்க மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறாத நாட்களிலும் எம்.பி.க்களின் செயல்பாடுகள், பொது மக்களுடன் உள்ள தொடர்பு, பொது நலன் பற்றிய செயல்பாடு ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யப்படும்.
சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு மத்திய மந்திரி பதவி வழங்குவும் திட்டமிடப்பட்டுள்ளது பாராளுமன்ற முக்கிய விவாதத்தில் பங்கேற்க அனுமதி மற்றும் முக்கிய பதவிகள் வகிக்கவும் வாய்ப்பளிக்கப்பட இருக்கிறது.
சிறப்பாக செயல்படாத எம்.பி.க்களுக்கு அது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. அடுத்து எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. கட்சி தொடர்பான பணிகளிலும் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி, பா.ஜனதா மாநில தலைவர் அமித்ஷா ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக பா.ஜனதா மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply