ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்

தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த இடத்துக்கு வந்த ஒரு இளம் வயது பெண், மண்டேலாவின் சிலைக்கு வீர வணக்கம் செலுத்தினாள். பின்னர், யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை எல்லாம் களைந்து தூர வீசி விட்டு, நிர்வாண கோலமாக நடந்து சென்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது ஏறிய அந்த பெண் மண்டேலாவின் சிலையை கட்டியணைத்தவாறு சில நிமிடங்கள் நின்றிருந்தாள்.

இந்த வினோத காட்சியை கண்டு அவ்வழியே வாகனங்களில் சென்ற ஆண்களும், பெண்களும் முகம் சுழித்தனர். அருகாமையில் இருக்கும் ஒரு உணவு விடுதியின் ஊழியர்கள் இதைக் கண்டு பதறிப் போயினர். உடனடியாக சிலை அருகே ஓடி வந்த அவர்கள் கீழே கிடந்த ஆடைகளை எடுத்து அவளிடம் தந்து, அவற்றை அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியுமாறு வலியுறுத்தினர்.

எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக ஆடைகளை உடுத்திக் கொண்ட அந்த பெண், எதுவுமே நடக்காதது போல், அங்கிருந்து சென்று விட்டதாக உள்ளூர் உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply