நல்லூர்க்கந்தன் மகோற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும். மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை மஞ்சம் உற்சவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16 ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை அருணகிரிநாதர் உற்சவமும்,, 17ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை கார்த்திகைத் திருவிழாவும்.
20ஆம் திகதி (புதன்கிழமை) காலை சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை கைலாசவாகன உற்சவமும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை கஜவல்லி முஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை வேல் விமான உற்சவமும். 22 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை மாம்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும் அதே தினம் மாலை ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை சப்பரத் திருவிழாவும் இடம்பெறவிருக் கின்றன.
மகோற்சவத்தின் இருபத்திநான்காவது நாளான இம்மாதம் 24ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும், இருபத்தைந்தாவது நாளான 25 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறவிருப்பதுடன் மறுநாள் 26ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை நிகழும் பூங்காவனத் திருவிழாவுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவு பெறுகிறது. மகோற்சவ காலத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு முருகப் பெருமான் வெளிவீதியுலா இடம்பெறும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply