இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் பலி

வடக்கில், புதுக்குடியிருப்பு நகரப் பிரதேசத்தில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவு தெரிவித்துள்ளது,

இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண் ஒன்றின் மீது மோதும் நோக்கில் வெடிபொருட்கள் நிரப்பிய லொறியொன்றினை விடுதலைப் புலிகள் தயார் செய்து கொண்டிருந்தபோது அது வெடித்துச் சிதறியுள்ளதாகவும் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் பின்னர் அவர்கள் புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரைத் தாக்குவதற்காக வந்த போது இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply