அரசிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு கிடையாது : அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

எக்காரணம் கொண்டும் தற்போதைக்கு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். “அரசாங்கத்துடன் நிலவி வரும் முரண்பாடுகள் சிலவற்றுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே. அதற்காக அரசாங்கத்தை விட்டு விலக மு.கா தயாரில்லை. அத்தகைய முடிவை மு.கா தலைமை எடுக்கவும் இல்லை. ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலி க்கு நேர்ந்த கதியே எமக்கும் நேரிடும். தேசிய அரசியல் நீரோட்டத்தை விட்டு விலகியிருக்க நேரிடும்” என்று அவர் கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி அங்கம் வகித்துக் கொண்டே அழுத்தம் கொடுக்க உத்தேசித்திருப்பதாகவும் உள்ளிருந்து அழுத்தம் கொடுக்கும் ஓர் தரப்பாக செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நிலைப்பாடு குறித்து கட்சியில் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகவும், பேருவளை அலுத்கம சம்பவங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கட்சி அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply