ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வீரர் வீரமரணடந்தார்: இஸ்ரேல் அறிவிப்பு
பாலஸ்தினத்தில் உள்ள காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுவருகிறது. இஸ்ரேலின் இத்தொடர் தாக்குதலால் காசா பகுதியில் ஏறத்தாழ 1600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். நேற்று தங்கள் நாட்டு ராணுவ வீரரான ஹாதர் கோல்டினை ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுருந்தது. இந்நிலையில் தங்கள் நாட்டு வீரரான கோல்டின், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மரணடைந்துவிட்டதாக இஸ்ரேல் தற்போது தெரிவித்துள்ளது. 23 வயதான கோல்டின் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடும் சண்டையில் மரணமடைந்ததாக அந்நாடு மேலும் கூறியுள்ளது.
கோல்டின் பெற்றோர் வசிக்கும் க்பார் சபாவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் முதல் மந்திரி ரப்பி ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். இஸ்ரேல் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்காணோர் அந்த ராணுவ வீரரின் இல்லத்தில் குவிந்து அவருக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply