ஜெயலலிதா குறித்த அவதூறு : தற்கொலைக்கு முயன்ற பெண்

தமிழக முதல்வர் குறித்து அவதூறுக் கட்டுரை வெளியிடப்பட்டதால், சேலத்தில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சேலம் அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவரே ஜெயலலிதா மீதான அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார். அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான விஜயலட்சுமியால் முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது இலங்கை அரசு வெளியிட்ட அவதூறு கட்டுரையை பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அவர் நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் 10 அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.

மயங்கிய நிலையில் காணப்பட்ட விஜயலட்சுமியை அவரது மகன் சேலம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு வந்த பொலிஸார் விஜயலட்சுமி எழுதிய ஒரு பரபரப்பு கடிதத்தை கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், முதல்வர் அம்மா தமிழகத்துக்கும் தாய், எங்கள் குடும்பத்துக்கும் தாய். இந்தியா முழுவதும் அம்மாவை பெருமைப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு மாண்புமிகு முதல்வர் அம்மாவையும், மோடியையும் தவறாக சித்தரித்து இருக்கிறது.

இதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இந்த பிரச்சினையால் நான் மனம் உடைந்து போய் விட்டேன். எனவே என் தற்கொலைக்கு காரணம் இலங்கை அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply