மனித உரிமையை வைத்துக் கொண்டு மேலைத்தேயம்; இலங்கையை மதிப்பிடக்கூடாது பூகோள அழகி கட்டியா வங்னர்
மனித உரிமையை வைத்துக்கொண்டு மேலைத்தேய நாடுகள் இலங்கையை மதிப்பிடக் கூடாது. இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை யென இலங்கை வந்திருக்கும் பூகோள அழகி கட்டியா வங்னர் தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருக்கும் அவர் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்தேய நாடுகள் விமர்சிக்கின்றனவே. இது பற்றி உங்கள் கருத்து எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஐரோப்பிய நாடுகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஆசிய நாடுகளை ஐரோப்பிய நாடுகள் மதிப்பிடக் கூடாது. மனித உரிமை விடயங்களை வைத்துக்கொண்டு இலங்கையை மதிப்பிடமுடியாது என அவர்களுக்குக் கூறுகிறேன்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாசாரம் காணப்படுகிறது. ஐரோப்பியர் தமக்கானதொரு கலாசாரத்தை வைத்திருக்கின்றனர். இதனை இலங்கை சில சமயங்களில் புரிந்துகொள்ளா திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சிறந்த மக்களைக் கொண்டதொரு அழகான நாடு. இங்கு எந்தவொரு பிழையான செயற் பாட்டையும் தான் காணவில்லை யென்றும் அவர் மேலும் குறிப்பிட்டு ள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply