நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள நாட்டில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளத்துக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான். இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. நேபாள அதிபர் ராம்பரன் யாதவ், பிரதமர் சுசில் கொய்ராலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
நேபாள பாராளுமன்றத்திலும் பேசிய மோடி, நேற்று அங்குள்ள பழமையான பசுபதிநாத் கோவிலில் சாமி கும்பிட்டார். நேற்றுடன் பிரதமரின் சுற்றுப்பயணம் முடிந்தது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், இரு நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உறவுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் விமானம் மூலம் நேற்று இரவு நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply