காஸாவில் இருந்து மொத்த தரைப்படைகளும் வாபஸ்: இஸ்ரேல் ராணுவம் திடீர் அறிவிப்பு

காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இன்று ஒப்பந்தம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி, அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், போர் நிறுத்த நேரம் தொடங்கிய உடனே காஸாவில் முகாமிட்டுருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் படைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என இஸ்ரேல் ராணுவ உயரதிகாரி லெப்டினெண்ட் கொலோனெல் பீட்டர் லெர்னெர் தற்போது தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்காக காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகள் தோண்டி வைத்திருந்த 32 சுரங்கப் பாதைகளும் தகர்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படுவதாகவும், (உள்ளூர் நேரப்படி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் படைகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு திரும்பி விடும் என பீட்டர் லெர்னெர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply