முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பான வழக்கு: குமரன் பத்மநாபனை விசாரிக்கக் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக இலங்கையில் உள்ள குமரன் பத்மநாபனை அழைத்து விசாரிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் கே.பி. என்ற குமரன் பத்மநாபனுக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாபன் தற்போது இலங்கையில் உள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி சத்திய நாராயணன் , அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply