மோர்சி ஆதரவாளர்கள் 12 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் காவல்துறை அதிகாரி கொலை வழக்கில் முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் 12 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்புக் கூறியது. எகிப்து தலைநகர் கெய்ரோவை அடுத்த கேர்தசா நகரில் பதுங்கியிருந்த மோர்சியின் ஆதரவாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை அதிகாரி நபில் ஃபாரக் உயிரிழந்தார்.இது தொடர்பாக எகிப்து போலீஸார், மோர்சி ஆதரவாளர்கள் 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், மோர்சியின் ஆதரவாளர்கள் 12 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply