புலிகளுடன் நடக்கும் யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பெருமளவு சிறுவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்துமிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 60,000த்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாது அவதியுறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த வருடத்தில் குறித்த சிறுவர்கள் 12 தடவைகளுக்கு மேல் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள், காயமடைதல்கள் மட்டுமல்லாது சிறுவர்கள் கடுமையான மன உலைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply