சர்வதேச தலையீட்டை தடுக்கவே விசேட நிபுணர்கள் குழு நியமனம் : அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூவரங்கிய விசேட நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. பிரேரணைக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச தலையீட்டைத் தடுக்கும் வகையிலேயே இந்த நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இக்குழுவில் இடம்பெற்றுள்ள மூவரதும் தகைமை, துறை சார்ந்த நிபுணத்துவம், சர்வதேச தர சிறப்புத் தேர்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி இக்குழுவை நியமித்தார் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அதிமுக்கிய நடவடிக்கைக்கு அரசாங்கம் நிதியைச் செலவிட்டது போன்றே நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் செயற்படவுள்ள இந்த நிபுணத்துவ குழுவுக்கான கொடுப்பனவுகள் செலவுகளையும் அரசாங்கமே வழங்கும் எனவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள் வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கு வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நிபுணத்துவக் குழுவின் நியமனம், செயற்பாடுகள், அவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

மேற்படி நிபுணர் குழுவை நியமிப்பதில் விசேட முறைமையொன்று பின்பற்றப் படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நவநீதம்பிள்ளையை நியமித்துள்ளமை போன்று ஜனாதிபதி செயலகத்தினால் மேற்படி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைக்குரியவர்கள் தகைமையு ள்ளவர்கள்., நிபுணத்துவமுடையவர்கள் என்பதை இனங்கண்டே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவர்களாவர்.

ஜெனீவா தீர்மானத்திற்கும் இந்த நிபுணத்துவ குழுவுக்குமிடையில் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதை குறிப்பிட வேண்டும்.

அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் காலத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசகர்கள் தேவைப்படுவதை அந்த ஆணைக்குழு ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தது.

இதற்கிணங்க இந்த நிபுணத்துவக் குழுவை ஒரு வருடத்தின் பின் இந்த ஆகஸ்டில் ஜனாதிபதி நியமித்து ள்ளார்.

இது ஒரு தேசிய நியமனமே தவிர சர்வதேச நியமனம் அல்ல. எமது நாட்டு ஆணைக்குழுவுக்கு இவர்கள் ஆலோசனை வழங்குவர்.

இவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இவர்களது பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. அதற்கிடையில் அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாதுள்ளது.

எனினும், அவர்களின் பணிகள் முடிந்தும் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்.

இது நாட்டின் முக்கிய தேவைக்காக செலவிடப்படும் நிதியாகும். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் நிதியை செலவிட்டது. அதே போன்று நாடு சாவல்களை எதிர்க்நோக்கும் வேளையில் அவற்றுக்குப் பதில் கொடுக்க எடுக்கும் நடவடிக்கைக்கும் நிதி ஒதுக்குவது நியாயமானதே.

இந்த நிபுணர்குழு நியமனம் அரசாங்கம் சார்ந்த விடயம். இது நாட்டின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் விடயங்களில் ஒரு அம்சமாகும். இத்தகைய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

இதில் எந்த சட்டத்தடைளு மில்லை. எனினும், இதனை எதிர்க்கட்சித் தலைவர் வேறு கோணத்தில் உணர்கிறார். வேறு திசைக்கு நகர்த்துகிறார் என தெரிகிறது. என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply