இந்தியாவிலும் எபோலா காய்ச்சல் பரவும் பீதி

எபோலா காய்ச்சல எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர்  பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எபோலா காய்ச்சல் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணி நேர அவசர உதவி மையத்தை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இன்று முதல் செயல்பட தொடங்கும் இந்த உதவி மையத்தின் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள் 011-23061469’ 3205 மற்றும் 1302’ என்று அறிவித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்த்தன், ‘எபோலா காய்ச்சல் பற்றி மக்கள் பீதியடைய தேவை இல்லை. இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எபோலா அறிகுறிகளால் பாதிக்கப்படும் டெல்லிவாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எபோலா நோயின் தாக்கம் தொடர்பாக கண்காணித்து, உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாகவும், எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வரும் சுமார் 47 ஆயிரம் இந்தியர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு, இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply