இலங்கையின் உணர்வுகளை கௌரவப்படுத்துவது அவசியம் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அமைச்சர் ஜீ.எல். விளக்கம்

இலங்கையின் உணர்வுகளை கெளரவப் படுத்தும் அவசியம் பற்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து உரையாடிய போதே அமைச்சர் மேற்கண்ட வாறு கேட்டுக் கொண்டார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் வெளி உறவுகள் அமைச்சில் சந்தித்த வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டின் தற்போதைய பல்வேறு நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு விபரித்தார்.உள்ளூர் கருத்துக்களைப் பொறுத்தவரை வெளிநாட்டுத் தூதுவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமது பணிக்குள் வராத விடயங்களில் பங்கேற்பது தொடர்பாகவும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கொள்கைகளை உறுதி செய்வதில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் நியாயமான பொறுப்பு கொண்டவர்களாக இருப்பர்.

இலங்கை சர்வதேச சமூகத்துடன் கருத்துப் பரிமாறல்களிலும் சுமுகமாக உறவுகளுடன் எல்லா வேலைகளிலும் ஆர்வமாகவே உள்ளது.

உள்ளூர் விவரங்களின் பக்கச் சார்புடைய விடயமாக அமைவதற்கு துணை போகும் நடவடிக்கைகளில் இருந்து ராஜதந்திர அமைப்புக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காணாமற் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆராயும் ஆணைக்குழுவுக்கு உதவுவதற்கு நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்கள் தொடர்பாகவும், அவர்களின் பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் விபரித்தார்.

வெளிநாடுகளிலுள்ளவர்கள் அகதி அந்தஸ்து கோரும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்தமை தொடர்பான காரணங்கள் பற்றியும் அவர் விளக்கினார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான அரசின் கொள்கை, இவ்விடயமாக அண்மைக்காலமாக ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் அமைச்சர் ராஜதந்திரிகளுக்கு விளக்கினார்.

அரசமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக் குழு ஆற்றும் பணிகள் பற்றியும் அமைச்சர் எடுத்துக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply