இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை விற்ககூடாது என்று தெரிவிக்கும் புலிகள் எந்த அடிப்படையில் எம்மிடம் பணம் கேட்டு வருகின்றனர்:பிரித்தானிய வர்த்தகர்
இலங்கை பொருட்கள், பத்திரிகைகளை வாங்க கூடாது என்ற பிரச்சாரத்தை புலிகள் மீண்டும் கட்டவிள்த்து விட்டுள்ளனர். புலிகளின் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த காலத்தில் இருந்து புலிகள் இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொள்வதும் பின்னர் இவ் பொருட்களை தாங்களே இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து புலம்பெயர் நாடுகளில் விற்பனை செய்வதும் மொத்த இறக்குமதியாளர்களாக கூட இருந்துள்ளனர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் புலிகள் வன்னியில் தோல்வியை சந்தித்து தமது நிலப்பரப்புக்களை சிங்கள படைகளிடம் இழந்துவரும் நிலையில் தற்போது மீண்டும் இலங்கை பொருட்கள், பத்திரிகைகளை வாங்கி இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு துணைபோக வேண்டாம் என்ற பிரச்சாரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். புலிகளின் தேவைக்கு ஏற்பவும் வசதிக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படும் இவ் பிரச்சாரங்களால் புலம்பெயர் தேசங்களில் வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் தமிழ் வர்த்தகர்கள் பலரும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்னர்.
வங்கியில் கடன் எடுத்தும், நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கியும் வியாபாரத்தை நடாத்திவரும் எம்மை இவ் புலிகள் ஒருபோதும் உருப்பட விடமாட்டார்கள் என்றும், பல இலட்சம் பவுண்ஸ் நிதியை முதலிட்டு தொழிலை நடாத்திவரும் எங்களிடம் வந்து ஒரு கதவால் இலங்கை பொருட்களை விற்க்க கூடாது என்று கூறுவதும், மறு கதவால் வந்து அவசர நிதி தர வேண்டும் என்று கோருகின்றனர். புலிகளின் இவ் நிலையில் இருந்து ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது. புலிகள் இலட்சியமோ, நோக்கமோ சிந்தனையே அற்றவர்கள் என்று தமது வசதிக்கு ஏற்ப தமது இலட்சியத்தையும் நோக்கத்தையும் மாற்றி கொள்பவர்களாகவே இருக்கின்றனர் என்பதற்கு மேற்படி உதாரணம் பொருத்தமானது என்று வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை விற்க கூடாது என்று தெரிவிக்கும் புலிகள், எந்த அடிப்படையில் எம்மிடம் பணம் கேட்டு வருகின்றனர் என்பது புரியவில்லை. ஆரம்பத்தில் 5,000 பவுண்ஸ் தருமாறு கோரியவர்கள் பின்பு 2000 என்று வந்தும் வர்த்தகர்கள் கொடுக்க முன்வராத நிலையில் 1000 பவுண்ஸ் ஆவாது தாருங்கள் என்று கூறிய புலிகள் அதுவும் கிடைக்காது என்று தெரியவந்தவுடன் தற்போது 100 பவுண்ஸ் ஆவாது தாருங்கள் என்று வருகின்றார்கள். நாம் வியாபாரம் மேற்கொண்டால்தானே இவர்களுக்கு நிதி வழங்க முடியும். எம்மை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது அதனை தமிழ்மக்கள் வாங்க கூடாது என்று ஒருபக்கம் தெரிவித்து கொண்டு, மறுமுனையில் எம்மிடம் வந்து பணம் தருமாறு கோருவதுதான் மிகவும் வேடிக்கையானது.
புலிகளின் இவ் அநியாயம் தொடருமானால் தாம் பொலிஸாரின் உதவியை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள மேற்படி வர்த்தகர் புலிகளின் இவ் மிரட்டல்கள் தொடர்பாக தனக்கு தெரிந்த வர்த்த நண்பர்கள் பலர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். எனவே புலிகளின் அச்சுறுத்தல் தொடருமானால் எனக்கும் பொலிஸாரை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள மேற்படி வர்த்தகர் தனது பாதுகாப்பு கருதி தனது பெயரையும் வர்த்தக நிலையத்தின் பெயரையும் வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply