மக்களை குழப்பாது பாராளுமன்ற உரைகளை நிகழ்த்த வேண்டும்
பாராளுமன்றத்தில் உரை யாற்றும் போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி. ஐ. தே. க. எம்.பி. புத்திக்க பத்திரனவுக்குத் தெரிவித்தார். வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தில் நீர் வழங்கல் தொடர்பாக கேள்வியெழுப்பிய புத்திக பத்திரன எம்.பி., விநியோகிக்கப்படும் நீரின் தரம் தொடர்பில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன. நாட்டில் விநியோகிக்கப்படும் நீர் தரமானது என்றும், மக்களை பிழையாக வழிநடத்தும் வகையில் ஐ. தே. க. எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் கூறினார்.
குடிநீர் மற்றும் உணவு தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களை குழப்பக் கூடாது என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பொறுப்புடன் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென பிரதி சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply