மனித உரிமை ஆணையத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பதை விட விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்!

இலங்கைக்கு செல்லாமலேயே, அங்கு நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய ஒரு பயனுள்ள விசாரணையை ஐ.நா விசாரணைக் குழுவால் நடத்த முடியுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐ.நா. குழுவொன்றை அண்மையில் அமைத்தது. இக்குழுவுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் கூறுகையில்,

இலங்கையில் நடந்த அத்துமீறல்களுக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்வதற்கு இந்த விசாரணை மிகவும் அவசியம் என்றார்.

மனித உரிமை ஆணையத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பதை விட விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply