பலஸ்தீன மக்களுக்கென இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி ஐனாதிபதி அறிவிப்பு
பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதோடு பலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த நோன்பு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட காஸா மீதான தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப் படுத்தியிருந்தார்.
காஸாவில் மோதல்கள், வன்முறைகள் நிறுத்தப்பட்டு அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாத ஆரம்பத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஸாவின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற உயிரிழப்புகளுக்காக ஜனாதிபதி அவர்கள் தனது கவலையையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் மத்திய கிழக்கு பிராந்திய சுற்றுப் பயணத்தின் போது பலஸ்தீனத்துக்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் சென்றிருந்தார்.
பலஸ்தீனத்துக்கான தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தொடர்ச்சியான ஆதரவு என்பவற்றுக்காக பாலஸ்தீனத்தின் அதியுயர் விருதான ‘பலஸ்தீனத்தின் நட்சத்திரம்’ என்ற விருதும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
பலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1988 ம் ஆண்டு இலங்கை அங்கீகரித்தது என்பதும் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பலஸ்தீனத்தில் ‘மஹிந்த ராஜபக்ஷ வீதி’ என ஒரு வீதிக்கு பெயரி டப்பட்டுள்ளமையும் குறிப்பி டத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply