1978 ஐ.தே.க கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்களுக்கே ஆப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ஐ.தே.க. தயாரித்த 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இன்று ஐ.தே.க.வுக்கே ஆட்சிக்கு வருவதற்கு தடங்கலாக மாறியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐ.தே.க.வே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தது. தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். அவர் உண்மையாகத்தான் இவ்வாறு கூறுகிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐ,ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு கோரி வருகின்ற போதும் இது வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் அவ்வாறான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை. அது குறித்து ஆராய்வதற்கு சுதந்திரக் கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தேசிய பிரச்சினைகளின் அடிப்படையிலேயே கூட்டணிகள் உருவாகின்றன. கூட்டுக் கட்சிகளின் தனித்துவத்தை பேணும் வகை நாம் செயற்பட்டு வருகிறோம்.

தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்த யோசனைகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் ஆராயப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டது. பல்வேறு விடயங்களை பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி கட்சிகள் பேசி முடிவு எடுக்கின்றன. கூட் டணி கட்சிகளிடையே பிரச்சினை எதுவும் கிடையாது. தேசிய சுதந்திர முன்னணியின் யோசனைகளை செயற்படுத்தவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கும் விடயங்களை அடுத்த தேர்தலுக்கு முன் நிறைவேற்றுகிறோம். ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் சு.க எதுவித யோசனையும் முன்வைக்கவில்லை.

சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வர முடியாத வகையிலே 1978 அரசியலமைப்பை ஐ.தே.க. நிறைவெற்றியது. தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ரணில் கூறியுள்ளார். அவர் உண்மையாகத் தான் இதனை

கூறினாரா. நாம் ஆட்சிக்கு வர முடியாதவாறு ஐ.தே.க. அமைத்த சட்ட மூலம் இன்று அந்தக் கட்சிக்கே தடங்கலாக மாறியுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் நாம் இலகுவாக வெற்றி பெறுவோம் எதிர்க் கட்சியினால் எம்மை நெருங்கக் கூட முடியாது என்றார்.

இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டி.யு. குணசேகர, 1978 முதல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இடதுசாரி கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த விடயம் குறித்து அநேக கட்சிகள் பேசி வருகின்றன.

கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. 82 வீத வாக்குகளை பெற்றது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply