இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட அமெரிக்க வெளியுறவு மந்திரி வலியுறுத்தல்
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அமெரிக்காவும் இணைந்துகொள்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 50 கோடிக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தங்களது வாக்குரிமையை செலுத்தியதன் மூலம் உலகின் ஜனநாயக செயல்பாட்டிலும், மனித வரலாற்றிலும் நீங்களும் பெரும் அங்கம் வகிக்கிறீர்கள்.
இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் ஜனநாயக வலிமையை தங்களது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கவேண்டிய பொதுவான பொறுப்பும் இருக்கிறது. மேலும், நாம் உருவாக்கிய வளமையை ஒருவருக்கொருவரும், இந்த உலகிற்கும் பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் வளமையான சிந்தனைகளால் வலிமையானவர்கள் என்பதையும் உலகிற்கு உணர்த்த இயலும்.
மேலும் இந்த நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply