ஈராக்கில் மதம் மாற மறுத்த 80 பேர் சுட்டுக் கொலை தீவிரவாதிகள் அட்டூழியம்

ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல நகரங்களை சன்னி பிரிவு ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். தற்போது குர்தீஷ்தானிலும் பல இடங்களை கைப்பற்றியுள்ளனர். அங்கு மைனாரிட்டியாக வாழும் ‘யாஷிடி’ என்ற பூர்வீக குடிமக்களையும், கிறிஸ்தவர்களையும் இஸ்லாம் மதத்துக்கு மாறுங்கள், இல்லா விட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி வருகின்றனர். இதனால் அஞ்சும் அவர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் சிஞ்சார் மலையில் பதுங்கி உள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் தண்ணீர் மற்றும் உணவு வழங்கி வருகிறது. இன்னும் பலர் ஊர்களில் தங்கியுள்ளனர்.சிஞ்சார் அருகே ‘கோசோ’ என்ற இடத்தில் ’யாஷிடி’ இன பூர்விக குடிமக்கள் உள்ளனர். அங்கு புகுந்த தீவிரவாதிகள் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினர்.

அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர். இஸ்லாம் மதத்துக்கு மாறும் படி 5 நாட்களாக சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன் பிறகும் அவர்கள் மதம் மாற மறுத்து விட்டனர்.

அதன் பின்னர் கோசோ கிராமத்தில் ஒரு பள்ளிக்கு அவர்களை அழைத்து சென்று ஆண்கள் 80 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், ‘யாஷிடி’ இன பெண்கள் மற்றும் குழந்தைகளை தல்அபிள் நகருக்கு கடத்தி சென்று விட்டனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply