இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும் கலகொட ஞானசார தேரர்!

நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக்கொடுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஆயர் இராயப்பு ஜோசப் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இது நாட்டுக்கு உகந்த செயல்அல்ல எனவும் இராயப்பு ஜோசப் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறி செயற்படுவதுடன், இறுதிக் கட்ட யுத்தத்தில் எமது படையினர் கொத்துக் குண்டுகளை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை இவரே முன்னெடுத்தார். எனவே அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைகள் குழு மீது நம்பிக்கை இல்லையென்றும், எனவே அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் ஆதலால் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே கலகொட அத்தே ஞாசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply